Header Ads

  • BREAKING



    பேருந்து ஊழியர்கள் வேலைநிறுத்தத்தால் ரயில்வே துறையை நாடியது தமிழக அரசு.


    அரசுப் போக்குவரத்து ஊழியர்கள் போராட்டம் காரணமாக, சென்னையில் கூடுதலாக 35 மின்சார ரயில்கள் இயக்கப்படுகின்றன. போக்குவரத்துக் கழக ஊழியர்கள் போராட்டம் காரணமாக பேருந்துகள் அதிகளவில் இயங்காததால், சென்னைவாசிகள் மின்சார ரயில்களைப் பயன்படுத்த வேண்டியுள்ளது. இதன் காரணமாக, சென்னையில் கூடுதலாக 35 மின்சார ரயில் சேவைகள் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. தமிழக அரசு கேட்டு கொண்டதன்படி, இந்த முடிவை எடுத்துள்ளதாக தெற்கு ரயில்வே சென்னை கோட்டம் அறிவித்துள்ளது.
    இதன்படி, இன்று காலை முதல், சென்னை சென்ட்ரல் புறநகர் ரயில் நிலையத்தில் இருந்து, ஆவடி, திருவள்ளுர் மார்க்கமாக 9 கூடுதல் ரயில் சேவை வழங்கப்படுகிறது. சென்னை கடற்கரை ரயில் நிலையத்தில் இருந்து, தாம்பரம், செங்கல்பட்டு மார்க்கமாக 9 ரயில் சேவையும், வேளச்சேரி மார்க்கமாக 10 ரயில் சேவையும், ஆவடி மற்றும் பொன்னேரி மார்க்கமாக 7 ரயில் சேவைகளும் கூடுதலாக வழங்கப்பட உள்ளன.

    கருத்துகள் இல்லை

    Post Bottom Ad