அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருடனான பேச்சுவார்த்தைக்கு பின் ஒருசில பேருந்துகள் இயக்கம்.
சென்னையை அடுத்த தாம்பரம் மற்றும் குரோம்பேட்டை பேருந்து பணிமனைகளுக்கு நேரில் சென்ற போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், அண்ணா தொழிற்சங்கத்தினரிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதையடுத்து அங்கு ஒருசில அரசு பேருந்துகள் இயங்கின. 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழகம் முழுவதும் 10 தொழிற்சங்கங்களை சேர்ந்த போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், தாம்பரம் மற்றும் குரோம்பேட்டை பணிமனைகளுக்கு சென்று பார்வையிட்ட போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜய பாஸ்கர், அண்ணா தொழிற்சங்கத்தினரை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து, ஒரு சில பேருந்துகள் மட்டும் இயங்க ஆரம்பித்தன. பெருங்களத்தூர் பேருந்து நிலையத்தில் அரசு பேருந்துகள் இயங்காததால், பொதுமக்கள் தனியார் பேருந்துகள் மற்றும் வேன்களில் பயணம் செய்தனர்.
கருத்துகள் இல்லை