Header Ads

  • BREAKING



    ஜெர்மனி இயக்குனர் வெர்னர் ஹெர்சாக்கிற்கு திரைப்பட சாதனை விருது.


    பிரான்ஸ் நாட்டின் கேன்ஸ் திரைப்பட விழாவில் ஜெர்மனி நாட்டின் புகழ்மிக்க இயக்குனர் வெர்னர் ஹெர்சாக்கிற்கு கோல்டன் காரியேஜ் விருது வழங்கப்பட்டது. அவருடைய புதிய திரைப்படமான “Salt and Fire”, வெளியாகியுள்ள நிலையில் அவர் இந்த திரைப்பட விழாவில் கௌரவிக்கப்பட்டார். தொடர்ந்த அவருடைய படைப்புத்திறனுக்கு இது ஒரு மரியாதை செலுத்தும் நிகழ்வு என்று பிரெஞ்சு இயக்குனர்களின் அமைப்பான திரை இயக்குனர்கள் சமூகம் தெரிவித்துள்ளது.
    உலகின் சிறந்த இயக்குனர்களுக்கு ஆண்டுதோறும் விருது வழங்குவது இந்த குழுவின் பணியாகும். விருது பெற்ற ஜெர்மனி இயக்குனர் ஹெர்சாக் புகைப்படக்காரர்களுக்கு போஸ் கொடுத்து மகிழ்ந்தார்.

    கருத்துகள் இல்லை

    Post Bottom Ad