Header Ads

  • சற்று முன்



    கரூர்:காரும் லாரியும் நேருக்கு நேர் மோதி விபத்து- 7 பேர் உயிரிழப்பு.



    கரூர் மாவட்டம் குளித்தலை அருகே தேசிய நெடுஞ்சாலையில் காரும், லாரியும் நேருக்கு நேர் மோதியதில் மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த 7 பேர் உயிரிழந்தனர்.
    மகாராஷ்டிரத்தைச் சேர்ந்த 8 வயது சிறுமி உள்பட 10 பேர், ஸ்கார்பியோ காரில் நாகை மாவட்டம் வேளாங்கண்ணிக்கு சுற்றுலா சென்று விட்டு, கேரளா புறப்பட்டுச் சென்று கொண்டிருந்தனர். கரூர் மாவட்டம் குளித்தலை அருகே தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த கார் மீது எதிர்புறமாக வந்த லாரி மோதியது. காரும் லாரியும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் காருக்குள் இருந்த சிறுமி மற்றும் ஒரு பெண், உள்பட 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். படுகாயம் அடைந்த ஒரு பெண் உள்பட 4 பேர் கரூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி மேலும் ஒரு பெண் உயிரிழந்ததால் பலி எண்ணிக்கை 7ஆக அதிகரித்துள்ளது. இதையடுத்து, விபத்து குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad