Header Ads

  • BREAKING



    சாதி மறுப்பு திருமணம் செய்த மகளை, எரித்துக் கொன்ற பெற்றோர் கைது.


    பேரையூரை அடுத்த வீராளம்பட்டியைச் சேர்ந்த பெரியகார்த்திகேயன் என்பவரின் மகளான சுகன்யா, ஈரோட்டிலுள்ள தனியார் மருத்துவமனையில் பயிற்சி செவிலியராக பணியாற்றி வந்தார். அப்போது அவருக்கும், மருத்துவமனையில் பணியாற்ற வந்த பெயிண்டரான ஈரோட்டைச் சேர்ந்த பூபதிக்கும் காதல் ஏற்பட்டுள்ளது.
    இருவரும் வேறு வேறு சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் சுகன்யாவின் பெற்றோர் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதையடுத்து வீட்டை விட்டு வெளியேறிய சுகன்யாவும் பூபதியும், ஜனவரி மாதம் பெருந்துறையில் பதிவுத் திருமணம் செய்து, ஈரோடு நொச்சிபாளையத்தில் வாடைகைக்கு வீடு எடுத்து தங்கியிருந்தனர். இந்நிலையில் கடந்த மாதம் நொச்சிபாளையத்திற்குச் சென்ற சுகன்யாவின் பெற்றோர், தாங்கள் சமாதானமடைந்துவிட்டதாகவும் ஊர் திருவிழாவிற்கு வருமாறும் கூறி அழைப்பு விடுத்துள்ளனர்.
    பெற்றோர்களிம் பேச்சை உண்மை என நம்பிய சுகன்யா, ஏப்ரல் 15ஆம் தேதி பூபதி மற்றும் அவரது பாட்டி பொன்னம்மாள் ஆகியோருடன் வீராளம்பட்டிக்குச் சென்றுள்ளார். அப்போது சுகன்யாவின் தந்தை பெரியகார்த்திகேயன் ஆகியோர் பூபதியையும் அவரது பாட்டியையும் அங்கிருந்து அடித்து விரட்டியுள்ளனர். அதோடு சுகன்யாவையும் தனி அறையில் அடைத்துவைத்து , பூபதியைப் பிரிந்து தங்களுடன் வந்துவிடுமாறு மிரட்டியதாகச் சொல்லப்படுகிறது. ஆனால் பூபதியை பிரிய சுகன்யாவை மறுத்தால், அவரது பெற்றோர் அவரை காட்டுப்பகுதிக்கு அழைத்துச் சென்று எரித்துக் கொலை செய்ததாக சொல்லப்படுகிற.
    இந்நிலையில் தனது காதல் மனைவியை மீட்டுத் தரக்கோரி, பூபதி பேரையூர் போலீசில் புகார் அளித்தார். இதையடுத்து சுகன்யாவின் பெற்றோரிடம் விசாரணை நடத்திய போலீசார், அவர் கொலை செய்யப்பட்டதை உறுதி செய்தனர்.
    சுகன்யாவை எரித்துக் கொலை செய்ததாக, சுகன்யாவின் பெற்றோர் பெரியகார்த்திகேயன், செல்லம்மாள், அத்தை லட்சுமி, அண்ணன் பாண்டி ஆகியோரை கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள சுந்தர் என்பவரை தேடி வருகின்றனர்.

    கருத்துகள் இல்லை

    Post Bottom Ad