Header Ads

  • BREAKING



    செல்போன் பேசியபடி வாகனம் ஓட்டினால் லைசன்ஸ் ரத்து.


    செல்போன் பேசியபடி வாகனம் ஓட்டினால் தற்காலிகமாக லைசென்சை ரத்து செய்யப்படும் என்று போக்குவரத்து ஆணையர் தயானந்த் கட்டாரியா கூறியுள்ளார். இதுகுறித்து  அவர் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் நாட்டிலேயே தமிழகத்தில்தான் அதிகளவு விபத்து ஏற்பட்டு உயிரிழப்பு நிகழ்வது சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. விபத்து மற்றும் உயிரிழப்பை தடுக்க மோட்டார் வாகனம், சாலை பாதுகாப்பு விதிகளை கடுமையாக கண்காணிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். போதையில் வாகனம் ஓட்டுபவர்கள், செல்போனில் பேசியபடி வாகனம் ஓட்டுபவர்கள், அதிவேகமாக வாகனங்களை ஓட்டுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுப்பதுடன் லைசென்சும் தற்காலிகமாக ரத்து செய்யப்படும்  என்று கட்டாரியா தெரிவித்துள்ளார்.

    கருத்துகள் இல்லை

    Post Bottom Ad