Header Ads

  • BREAKING



    தொடர் செயின் பறிப்பில் ஈடுபட்டு வந்த பட்டதாரி இளைஞர் கைது.


    சென்னையில் பெண்களிடம் தொடர்ந்து செயின் பறிப்பில் ஈடுபட்டு வந்த பட்டதாரி இளைஞரை விருகம்பாக்கம் போலீசார் கைது செய்துள்ளனர். விருகம்பாக்கம், வளசரவாக்கம் உள்ளிட்ட பகுகிதளில் சாலையில் தனியே நடந்து செல்லும் பெண்களை குறிவைத்து செயின் பறிக்கும் சம்பவங்கள் அதிகரித்து வந்தன. இதையடுத்து, அப்பகுதியில் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்த தனிப்படைப் போலீசார், பெண் ஒருவரிடம் செயினை பறிக்க முயன்ற இளைஞரை மடக்கிப் பிடித்து கைது செய்து விசாரித்தனர். விசாரணையில், அவர் அமைந்தகரையைச் சேந்த பிரகாஷ் என்பதும், பி.எஸ்சி பட்டதாரியான அவர் சொகுசு வாழ்க்கைக்காக செயின் பறிப்பில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்தது. திரைப்படம் ஒன்றில் இதுபோன்ற காட்சிகள் இடம்பெற்றதாகவும், அதன்பேரில் இவ்வாறு திருடி வந்ததாகவும் அவர் போலீசில் தெரிவித்துள்ளார்.

    கருத்துகள் இல்லை

    Post Bottom Ad