வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் பரவலாக மழை பொழிய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்.
வெப்பசலனத்தால் தமிழகம், புதுச்சேரியின் ஓரிரு இடங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நீலகிரி, வால்பாறை, கொடைக்கானல் , பகுதிகளில் கன மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும், சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் இருக்கும் எனவும் அந்த மையம் குறிப்பிட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக திருத்தணியில் 40 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகி உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கொடைக்கானலில் 9 சென்டி மீட்டர் மழை பதிவாகி உள்ளது.
கருத்துகள் இல்லை