Header Ads

  • BREAKING



    நிலக்கரி சுரங்க ஊழல் வழக்கில் சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு.


    முன்னாள் நிலக்கரித்துறை செயலாளர் ஹச்சி குப்தாவுக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. 69 வயதான குப்தா, காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியின்போது நிலக்கரித்துறைச் செயலாளராக பணியாற்றினார். மத்திய பிரதேச நிலக்கரிச் சுரங்க ஏலத்தின்போது குப்தா வெளிப்படைத்தன்மையை கடைபிடிக்கவில்லை என்றும் தனியார் நிறுனத்திற்கு விதிமுறைகளை மீறி நிலக்கரிச் சுரங்கங்கள் ஒதுக்கியதால் அரசுக்கு பலகோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டதாகவும் சிபிஐ குற்றம்சாட்டியிருந்தது. இந்த வழக்கில் தீர்ப்பளித்த சிபிஐ சிறப்பு நீதிபதி பரத் பிரஷார், முன்னாள் நிலக்கரித்துறை செயலாளர் ஹச் சி குப்தா, நிலக்கரித் துறை அமைச்சகத்தின் முன்னாள் இணைச் செயலாளர் கே எஸ் ((Kropha)) க்ரோப்பா, நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டுக்கான அப்போதைய இயக்குநர் கே சி சம்ரியா ((Samria)) ஆகியோருக்கும் இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனையும் ஒரு லட்ச ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.

    கருத்துகள் இல்லை

    Post Bottom Ad