Header Ads

  • BREAKING



    தமிழ்நாடு வானிலை: சென்னையில் வெயில் 42 டிகிரியை எட்டியது.


    சென்னையில் இன்று (வியாழக்கிழமை) காலை முதலே கடுமையான வெப்பம் நிலவிவந்த நிலையில் காலை 11.50 மணியளவில் வெப்பநிலை 42 டிகிரி செல்சியஸைத் தொட்டதாக தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் கூறியுள்ளார்.
    சென்னையில் இன்று காலை 11.50 மணியளவில் 42 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவானது. இந்த ஆண்டு கோடை காலம் தொடங்கியதில் இருந்து பதிவான வெப்ப அளவில் இதுவே மிக அதிகம்.
    கடைசியாக கடந்த 2003-ம் ஆண்டு மே மாதம் சென்னையில் 45 டிகிரி வெயில் அடித்தது மிக அதிகமான வெப்பநிலையாகும். அதன்பிறகு சென்னையில் கடந்த 2014-ல் 42.8 டிகிரி அளவுக்கு வெயில் அடித்தது. 2015-ல் 42.2 டிகிரி அளவுக்கு வெயில் அடித்தது.
    அதன்பிறகு இன்று (மே 18- 2017) காலை 11.50 மணி நிலவரப்படி 42 டிகிரி வெப்பம் பதிவாகியுள்ளது.
    இன்று அனல் காற்று அதிகமாகவே வீசும். அதனால், குழந்தைகள், வயதானோர் வெளியில் செல்வதைத் தவிர்க்கவும். 
    முன்னதாக கடந்த 16-ம் தேதி, தமிழக வரலாற்றில் முதல்முறை யாக 114 டிகிரி ஃபாரன்ஹீட் (45.5 டிகிரி செல்சியஸ்) வெயில் திருத்தணியில் பதிவானது.
    வெப்பம் எப்போது அதிகரிக்கும்?
    பொதுவாக காலை நேரங்களில் கடலில் இருந்து குளிர்ந்த காற்று நிலப்பகுதியை நோக்கி வீசும். அந்த காற்று சரியான நேரத்தில் வீசினால் வெப்பம் சற்று குறைந்து காணப்படும். தாமதமாக கடல்காற்று வீசினால் வெப்பம் அதிகரிக்கும். கடற்காற்று வர தாமதமாவதால் வெப்பம் அதிகரித்து வருகிறது.

    கருத்துகள் இல்லை

    Post Bottom Ad