Header Ads

  • BREAKING



    சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் புதிய நடைமுறை அமல்.


    சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் இன்று முதல் விமானம் ரத்து, தாமதம் போன்ற தகவல்கள் ஒலிபெருக்கி மூலம் அறிவிக்கப்பட மாட்டாது. டெல்லி, மும்பை, கொல்கத்தா, ஐதராபாத் விமான நிலையங்களில் பயணிகளுக்கு ஒலிபெருக்கி மூலம் தகவல் தெரிவிப்பதில்லை. மாறாக எஸ்.எம்.எஸ். மூலம் தகவல் கொடுக்கும் நடைமுறை அமலில் உள்ளது. இதேபோன்று, சென்னை உள்நாட்டு விமான நிலையமும் சைலண்ட் விமான நிலையமாக மாற்றப்படுகிறது. விமானம் ரத்து, தாமதம், நுழைவு வாயில் மாற்றம் போன்ற தகவல்கள் எஸ்.எம்.எஸ். மூலம் அனுப்பப்படும். அதே நேரத்தில், சர்வதேச விமானநிலையத்தைப் பொறுத்தவரை விமானம் புறப்படுவது குறித்த தகவல்கள் வழக்கம்போல் ஒலிபெருக்கி மூலம் தெரிவிக்கப்படும்.

    கருத்துகள் இல்லை

    Post Bottom Ad