Header Ads

  • BREAKING



    சென்னை: சிறுமிகளைக் கடத்த முயன்ற இருவர் கைது


    சென்னை மைலாப்பூர் பகுதியில் சிறுமிகளைக் கடத்த முயன்ற விவகாரத்தில் இருவரை போலீசார் கைதுசெய்துள்ளனர். சாந்தோம் பகுதியில் தனியாக விளையாடிக்கொண்டிருக்கும் சிறுமிகளைக் குறிவைத்து மர்ம நபர்கள் இருவர் ஆட்டோவில் வந்து கடத்தும் முயற்சியில் ஈடுபடுவதாக அப்பகுதி மக்கள் போலீசாரிடம் புகார் தெரிவித்தனர்.புகாரின் அடிப்படையில் மைலாப்பூர் துணை ஆணையர் பாலகிருஷ்ணன் உடனடியாக செயல்பட்டு அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு காமராக்களை ஆராயுமாறு போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளார். கடத்தல்காரர்கள் வந்த ஆட்டோவை முதலில் கண்டுபிடித்த போலீசார், பின்னர் சிறுமிகளைக் கடத்த முயன்ற அங்கமுத்து மற்றும் குணசேகரன் ஆகிய இருவரையும் கைதுசெய்து விசாரித்து வருகின்றனர். பொதுமக்கள் விழிப்புணர்வுடன் செயல்பட்டதால் சிறுமிகள் கடத்தல் தடுக்கப்பட்டுள்ளது.

    கருத்துகள் இல்லை

    Post Bottom Ad