Header Ads

  • BREAKING



    சென்னை மாநகர காவல் துறை ஆணையராக ஏ.கே.விஸ்வநாதன் நியமனம்.


    காவல் துறை உயரதிகாரிகள் 17 பேரை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி சென்னை மாநகர காவல் துறை ஆணையராக இருந்த கரண் சின்ஹா தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரிய ஏ.டி.ஜி.பியாக நியமிக்கப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக ஊர்க்காவல்படை ஏ.டி.ஜி.பி.யாக இருந்த ஏ.கே.விஸ்வநாதன் சென்னை மாநகர புதிய காவல் துறை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர்கள் தவிர மேலும் 15 பேரை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசின் உள்துறை கூடுதல் செயலாளர் நிரஞ்சன் மார்டி உத்தரவிட்டுள்ளார்.

    கருத்துகள் இல்லை

    Post Bottom Ad