அடுக்குமாடி குடியிருப்பில் தீவிபத்து – 4 பேர் உயிரிழப்பு.
சென்னை அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் உயிரிழந்தனர். 9 பேர் படுகாயமடைந்தனர்.
சென்னை வடபழனி அருகே, தெற்கு சிவன் கோயில் தெருவில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்று உள்ளது. இதன் கீழே இருக்கும் மின்சாரப் பெட்டியில் நள்ளிரவில் மின்கசிவு ஏற்பட்டது. இதன் காரணமாக, அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரண்டு சக்கர வாகனங்களில் தீப் பற்றியது. இதையடுத்து அருகில் இருந்த மற்ற வாகனங்களுக்கும் தீ பரவி கொளுந்துவிட்டு எரிந்தது. இதைக் கண்ட அக்கம் பக்கத்தினர் தீயணைப்பு துறைக்குத் தகவல் தெரிவித்தன்ர். இரண்டு தீயணைப்பு வாகனங்கள் விரைந்து வந்து தீயை போராடி அணைத்தன.
பின்னர் தீயணைப்புப் படையினர், அடுக்குமாடி குடியிருப்புக்குள் சென்றனர். புகைமூட்டத்தில் சிக்கி மயக்கமடைந்த நிலையில் இருந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு ஒரே குடும்பத்தை சேர்ந்த மீனாட்சி, சஞ்சய், செல்வி , சந்தியா ஆகியோர் உயிரிழந்தனர். படுகாயமடைந்த 9 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்தச் சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கருத்துகள் இல்லை