Header Ads

  • BREAKING



    சீனா – ஆசிய பிலிட்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் போட்டி சென்னை வைசாலி தங்கம் வென்றார்.



    சீனாவில் நடைபெற்ற ஆசிய கண்டத்திற்கான ((Blitz)) பிலிட்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் சென்னையைச் சேர்ந்த வைஷாலி பெண்களுக்கான பட்டம் வென்றார்.
    ஒன்பது கட்டங்களாக நடைபெற்ற இந்த செஸ் போட்டியில் வைஷாலி மிகச்சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ஆறு போட்டிகளில் வென்று இரண்டில் சமன் செய்தார். இறுதிப் போட்டியில் மங்கோலிய நாட்டைச் சேர்ந்த போட்டியாளரைத் தோற்கடித்து முதல் இடத்தைப் பிடித்து தங்கப்பதக்கம் வென்றார்.
    ஈரான் நாட்டைச் சேர்ந்தவர் இரண்டாம் இடத்தையும், இந்தியாவைச் சேர்ந்த மற்றொரு போட்டியாளரான பத்மினி ரவுத் ((Rout)) மூன்றாம் இடத்தையும் பெற்றனர்.

    கருத்துகள் இல்லை

    Post Bottom Ad