Header Ads

  • BREAKING



    சென்னை சி.பி.எஸ்.இ மண்டல அலுவலகம் மீது கல்வீச்சு.


    நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை சி.பி.எஸ்.இ மண்டல அலுவலகம் மீது மாணவர் அமைப்பினர் பெயரில் கல்வீசித் தாக்குதல் நடத்தப்படட்து. சென்னை அண்ணா நகரில் சி.பி.எஸ்.இ. மண்டல அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்தில் இன்று எஸ்.எஃப்.ஐ. எனும் மாணவர் அமைப்பினர் என்று கூறிக் கொண்டு நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர். தேர்வின் போது மாணவ – மாணவியர் வரம்பு மீறி சோதனை செய்யப்பட்டதற்கும் அவர்கள் கண்டனம் தெரிவித்தனர். அப்போது சிலர் சி.பி.எஸ்.இ மண்டல அலுவலகம் மீது கற்கள் மற்றும் கருப்பு மையை வீசி தாக்குதலில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை போலீசார் தடுத்து நிறுத்த முயன்றபோது இரு தரப்புக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்து போலீசார் அழைத்துச் சென்றனர். போராட்டத்தில் ஈடுபட்ட யாருமே மாணவர்கள் இல்லை என்றும், யாரும் எந்த கல்லூரியிலும் பயில்பவர்கள் இல்லை என்றும் போலீசார் கூறியுள்ளனர்.

    கருத்துகள் இல்லை

    Post Bottom Ad