Header Ads

  • BREAKING



    சென்னையில் ஆட்டோவில் சுற்றித் திரியும் குழந்தைக் கடத்தல் ஆசாமி.



    நேற்று முன் தினம் சாந்தோம் நெடுஞ்சாலைப் பகுதியில் உள்ள முத்துப்பாண்டி அவென்யூ என்ற பகுதியில் தொழிலதிபர் ஒருவரின் மகளான 8 வயதுச் சிறுமி மிதிவண்டியை ஓட்டி விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது ஆட்டோவில் வந்த ஒரு நபர் மிதிவண்டியை பழுதுபார்த்துத் தருவதாகவும் ஆட்டோவில் ஏறும்படியும் கட்டாயப்படுத்தியதாக கூறப்படுகிறது. எனினும் சிறுமி நிலைமையின் விபரீதத்தை உணர்ந்து கூச்சலிட்டதால் அந்த நபர் தப்பியோடியதாகவும் சொல்லப்படுகிறது.
    எட்டு வயது சிறுமியை கடத்த முயன்ற அதே நபர் நேற்றும் மயிலாப்பூர் பகுதியில் மற்றொரு சிறுமியிடம் கைவரிசையைக் காட்ட முயன்றபோது அந்தச் சிறுமியும் கூச்சலிட்டதையடுத்து கூட்டம் திரண்டதால் தப்பியோடிவிட்டதாகக் கூறப்படுகிறது. இது தொடர்பான இப்பகுதி மக்களின் புகாரையடுத்து போலீசார் இப்பகுதியில் உள்ள விடுதி ஒன்றின் கண்காணிப்புக் காமிரா பதிவுகளின் அடிப்படையில் இருவரைப் பிடித்து விசாரித்து வருகின்றனர். எனினும் இவர்கள் இருவரும் அந்த மர்ம நபராக இருக்க வாய்ப்பில்லை என்றும் கருதப்படுவதால் ஆட்டோவில் சுற்றித் திரியும் குழந்தைக் கடத்தல் ஆசாமியை போலீசார் தேடி வருகின்றனர்.

    கருத்துகள் இல்லை

    Post Bottom Ad