Header Ads

  • BREAKING



    சீனாவின் நடவடிக்கையால் இந்திய பெருங்கடலில் பதற்றம் நிலவுகிறது – அமெரிக்கா குற்றச்சாட்டு.


    சீனாவின் நடவடிக்கையால், இந்தியப் பெருங்கடல் பகுதியில் பதற்றம் நிலவுவதாக, அமெரிக்கா கவலை தெரிவித்துள்ளது. சரக்கு கப்பல்களின் பயண நேரத்தை குறைக்கும் வகையில், இந்தியப் பெருங்கடல் வழியாக பொருளாதார கடல் வழித்தடத்தை உருவாக்கும் நடவடிக்கையில் சீனா தீவிரம் காட்டி வருகிறது. இதற்கு இந்தியா கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், சீனாவின் நடவடிக்கை கவலையளிப்பதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. இது தொடர்பாக பேசியுள்ள பசிபிக் கடற்பகுதிக்கான அமெரிக்க கடற்படைத் தளபதி ஸ்காட் ஸ்விப்ட் ((Scott Swift)), பொருளாதார கடல் வழித்தடத்தை உருவாக்கும் சீனாவின் நோக்கம் தெளிவாக இல்லை என்று கூறியுள்ளார். இது குறித்து தான் பயணித்த அனைத்து நாடுகளிலும் கேள்வி எழுப்பப்பட்டதாக கூறிய அவர், சீனாவின் நடவடிக்கை சில விளைவுகளை ஏற்படுத்தும் என்றும் தெரிவித்தார். தூதரக ரீதியிலான பேச்சுவார்த்தைகள் மூலம் கொரிய தீபகற்பத்தில் நிலவும் பதற்றத்தை தணிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் ஸ்காட் ஸ்விப்ட் தெரிவித்தார்.

    கருத்துகள் இல்லை

    Post Bottom Ad