Header Ads

  • BREAKING



    சீன நீர்மூழ்கி கப்பலுக்கு கொழும்பு துறைமுகத்தில் அனுமதி மறுப்பு.


    சீன நீர்மூழ்கி கப்பலை கொழும்பு துறைமுகத்தில் நிறுத்த அனுமதி அளிக்க முடியாது என்று இலங்கை கூறியுள்ளது. கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் சீன நீர்மூழ்கி கப்பல் கொழும்பு துறைமுகத்தில் எரிபொருள் நிரப்ப அனுமதிக்கப்பட்டது. இதற்கு இந்தியா கடும் அதிருப்தி தெரிவித்திருந்தது. இந்த நிலையில் இரண்டு நாள் பயணமாக பிரதமர் நரேந்திர மோடி இலங்கை சென்றுள்ள நிலையில், மீண்டும் ஒரு நீர்மூழ்கி கப்பலை கொழும்பு துறைமுகத்தில் நிறுத்த சீனா அனுமதி கோரியது. ஆனால் தற்போதைய சூழலில் சீன கப்பலுக்கு கொழும்பு துறைமுகத்தில் அனுமதி இல்லை என்று இலங்கை தெரிவித்துள்ளது.

    கருத்துகள் இல்லை

    Post Bottom Ad