Header Ads

  • BREAKING



    நாமக்கல்:சாய கழிவுகளை காவிரி ஆற்றில் கலந்துவிட்ட 6 சாய பட்டறைகளுக்கு சீல்.



    நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அருகே, சட்டவிரோத சாய பட்டறைகளுக்கு சீல் வைத்த மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள், மேற்கொண்டு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று புகார் எழுந்துள்ளது.
    நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் பகுதியில், 200-க்கும் மேற்பட்ட சாய பட்டறைகள் செயல்பட்டு வருகின்றன. இந்த சாய பட்டறைகளிலிருந்து வெளியேற்றப்படும் கழிவுநீர் சுத்திகரிக்கபடாமல் காவிரி ஆற்றில் கலக்கப்பட்டதால், அதுபோன்ற பட்டறைகளுக்கு சீல் வைக்கப்பட்டது. மேலும், தற்போது ஏற்பட்டுள்ள வறட்சி காரணமாக சாய பட்டறைகளை இயக்கவேண்டாம் எனவும், மாசு கட்டுபாட்டு வாரியம் தடை விதித்துள்ளது. இருப்பினும், அனுமதிபெற்று இயங்கிவரும் சாயபட்டறைகள் சில, சாய கழிவு நீரை சுத்திகரிக்காமல் நேரடியாக காவிரி ஆற்றில் கலந்து வருவதாக புகார் எழுந்தது. இதையடுத்து ஆய்வு மேற்கொண்ட அதிகாரிகள், ஆவத்திபாளையம் பகுதியில் 6 பட்டறைகளுக்கு சீல் வைத்தனர். சின்னதல வனங்காடு பகுதியில் இயங்கி வரும் சாயபட்டறை ஒன்று, நிலத்தடியில் ரகசிய குழாய் பதித்து சாய கழிவுகளை வெளியேற்றுவதை அதிகாரிகள் கண்டபோதும் நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. அந்தப் பட்டறை அரசியல் கட்சிப் பிரமுகர் ஒருவருக்கு சொந்தமானது என்பதே இதற்கு காரணம் என்று அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

    கருத்துகள் இல்லை

    Post Bottom Ad