Header Ads

  • BREAKING



    திண்டுக்கல்:குளத்தில் கொட்டப்படும் சாயக்கழிவுகள் – நடவடிக்கை எடுக்காத அதிகாரிகள்.


    திண்டுக்கல் அருகே குளத்தில் சாயக்கழிவுகளை லாரிகள் மூலம் கொட்டும் மர்ம கும்பல் குறித்து புகார் அளித்தும் மாசுக்கட்டுப்பாடு வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதில்லை எனக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
    திண்டுக்கல் – மதுரை தேசிய நெடுஞ்சாலையில் தோமையார்புரத்திற்கும், சவேரியார்பாளையத்திற்கும் இடையில் 30 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது துரைக்குளம். ஒரு காலத்தில் இக்குளம் தான், அப்பகுதி மக்களின் விவசாயத்திற்கும் குடிநீருக்கும் நீராதாரமாக விளங்கி வந்தது. பருவமழை பொய்த்து போனதானல் தற்பொழுது வறண்டு காணப்படுகிறது. இக்குளத்தை பல ஆண்டுகளாக பொதுப்பணித்துறையினர் கண்டுகொள்ளாமல் விட்டதால், சீமைக் கருவேல மரங்கள் சூழ்ந்து அடர்ந்த காடு போல காட்சியளிக்கிறது.

    இந்நிலையில் ஈரோடு, கரூர், திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் செயல்பட்டு வரும் சாயப்பட்டரை கழிவுகளில் இருந்து வெளியேற்றப்படும் சாயக்கழிவுகள், லாரிகள் மூலம் திண்டுக்கல் கொண்டுவரப்பட்டு துரைக்குளத்தில் கொட்டப்படுகிறது. பகலில் சாயக்கழிவுகளை குளத்தில் கொட்டினால் எதிர்ப்பு கிளம்பும் என்பதால் பெரும்பாலும் நள்ளிரவு நேரங்களில்தான் கொட்டப்படுகின்றன.
    இவ்வாறு கொட்டப்படும் சாயக் கழிவுகளால் சவேரியார்பாளையம் பகுதிகளில் துர்நாற்றம் வீசுவதுடன், காற்றின் மூலம் தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டு உள்ளதாக கூறுகின்றனர் அப்பகுதி மக்கள். மேலும் குழந்தைகள், வயதானோர், நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தோருக்கு எளிதில் நோய் தொற்று ஏற்பட்டு, உடல்நிலை பாதிப்புக்குள்ளாவதாகக் கூறப்படுகிறது.

    கருத்துகள் இல்லை

    Post Bottom Ad