Header Ads

  • BREAKING



    கண்டெய்னர் லாரியில் இருந்து கசிந்த வாயுவால் 100க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ, மாணவிகள் பாதிப்பு.


    டெல்லியில் வாயுக்கசிவால் பாதிக்கப்பட்ட 100க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ, மாணவிகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். டெல்லி துக்ளகாபாத் பகுதியில் பள்ளி தொடங்கிய சிறிது நேரத்தில், மாணவ, மாணவிகள் சிலருக்கு கண் எரிச்சலும், வாந்தி, மயக்கமும் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, அவர்களை அருகில் இருந்த மருத்துவமனையில், ஆசிரியர்களும், பள்ளி நிர்வாகிகளும் அனுமதித்தனர். பள்ளிக்கு வந்த போலீசார், மாணவ, மாணவிகள் உடல்நல பாதிப்பு குறித்து விசாரணை மேற்கொண்டதில், பள்ளி அருகே நிறுத்தப்பட்டிருந்த கண்டெய்னர் லாரியில் இருந்து வாயுக்கசிவு ஏற்பட்டதை கண்டறிந்தனர். பின்னர், அந்த கண்டெய்னர் லாரியை அப்பகுதியில் இருந்து அகற்றினர்.

    கருத்துகள் இல்லை

    Post Bottom Ad