Header Ads

  • BREAKING



    ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கூட்டுறவு வங்கி ஊழியர்கள் உண்ணாவிரதம்.


    ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கூட்டுறவு வங்கி ஊழியர்கள், சென்னை வள்ளுவர் கோட்டத்தில் அடையாள உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளனர். பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பின்னர், மக்களிடம் இருந்து பெறப்பட்ட 400 கோடி ரூபாய் பழைய நோட்டுகளை ரிசர்வ் வங்கி இன்னும் திரும்பப் பெறவில்லை என்றும், இதனால் தங்களுக்கு வட்டி இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
    திமுக, அதிமுக ஆட்சிக்காலத்தில் செய்யப்பட்ட விவசாயக் கடன் தள்ளுபடியில், கணிசமான அளவு தொகை இன்னும் வந்து சேரவில்லை என்றும் கூட்டுறவு வங்கி ஊழியர்கள் புகார் கூறியுள்ளனர். இதை உடனடியாக வழங்கிட வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    கருத்துகள் இல்லை

    Post Bottom Ad