Header Ads

  • BREAKING



    பட்டப் பகலில் நீதிமன்ற வளாகத்தில் ஒருவர் காரில் கடத்தல்.


    கடலூர் மாவட்டம் பண்ருட்டி நீதிமன்றத்தில், ஜாமீன் பெற்று வெளியே வந்த ஒருவரை, மர்ம கும்பல் ஒன்று பட்டப் பகலில் காரில் கடத்திச் சென்றுள்ளது. பொன்னங்குப்பத்தை சேர்ந்த சங்கர், தனியார் கேஸ் ஏஜென்சி வைத்துள்ளார். இவருக்கும் பண்ருட்டியை சேர்ந்த பேருந்து உரிமையாளர் ராஜேஷுக்கும் கொடுக்கல் வாங்கல் தகராறு இருந்துள்ளது. இதனால் ஏற்பட்ட தகராறின்போது, ராஜேஷ் மீது காவல்நிலையத்தில் சங்கர் புகார் அளித்திருந்தார். இதையடுத்து, முன்ஜாமீன் கேட்டு பண்ருட்டி நீதிமன்றத்தில் விண்ணப்பித்திருந்த ராஜேஷுக்கு, ஜாமீன் கிடைத்தது. ஆனால், ஜாமீன் பெற்று வெளியே வந்த ராஜேஷை, நீதிமன்ற வளாகத்தில் காருக்குள் காத்திருந்த 8 பேர், அடித்து தரதரவென இழுத்து காரில் கடத்திசென்றனர். அந்த கும்பலை போலீஸார் வலைவீசி தேடி வருகின்றனர்.

    கருத்துகள் இல்லை

    Post Bottom Ad