Header Ads

  • BREAKING



    நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் தொழில் அதிபர் மல்லையா குற்றவாளி -உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு.


    நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், வரும் ஜூலை 10ஆம் தேதி விஜய் மல்லையா நேரில் ஆஜராகுமாறு, உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. எஸ்.பி.ஐ. ((SBI)) உள்ளிட்ட பொதுத்துறை வங்கிகளிடம் சுமார் 9 ஆயிரம் கோடிக்கு அதிகமாக கடன் பெற்ற கிங் பிஷர் நிறுவன அதிபர் விஜய் மல்லையா, கடனைத் திருப்பிச் செலுத்தாமல், லண்டனுக்கு தப்பியோடிவிட்டார். தொழிலதிபர் விஜய் மல்லையாவை இந்தியா கொண்டுவந்து, கடன் தொகையை வசூலிக்க நடவடிக்கை எடுக்க கோரி, வங்கிகள் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளன. இந்த வழக்குகள் மீதான விசாரணை உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில், வாராக்கடனில் 40 மில்லியன் அமெரிக்க டாலர் பணத்தை வசூலிக்க வழிமுறை இருப்பதாக சி.பி.ஐ. தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார். ஆனால் விஜய் மல்லையா நீதிமன்றத்தில் ஆஜராகாமல், அவமதித்து வருவதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார்.இந்த வழக்கு, இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், விஜய் மல்லையா குற்றவாளி என உச்சநீதிமன்றம் அறிவித்தது. மேலும் விஜய் மல்லையா வரும் ஜூலை 10ஆம் தேதிக்கு நேரில் ஆஜராகவும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    கருத்துகள் இல்லை

    Post Bottom Ad