Header Ads

  • BREAKING



    காக்னிசன்ட் தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் கட்டாயப்பணி விலகல் செய்ய சொல்வதாக தொழிலாளர் நலத்துறையில் புகார்.


    காக்னிசன்ட் தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் பணியாற்றும் மூத்த ஊழியர்களுக்கு 9 மாத சம்பளத்தைக் கொடுத்து ராஜினாமா செய்ய வலியுறுத்துவதாக, ஊழியர்கள் கூட்டமைப்பினர் தொழிலாளர் நலத்துறையில் புகாரளித்துள்ளனர். காக்னிசன்டில், மூத்த ஊழியர்களிடம், அவர்களின் பணிக்கு ஏற்ப, 9, 6 மற்றும் 4 மாத சம்பளத்தை மொத்தமாக கொடுத்து ராஜினாமா செய்யும்படி வலியுறுத்தியதாகக் கூறப்படுகிறது. உயர்தர வளர்ச்சிக்காக ஆட்குறைப்பு அவசியம் என அந்நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார். இதனிடையே சென்னை குறளகத்தில் உள்ள தொழிலாளர் நலத்துறை அதிகாரியிடம் முறையிட்ட அந்நிறுவனத்தின் மூத்த ஊழியர்கள், தங்களை கட்டாயப்படுத்தி பணியிலிருந்து விலகச் சொல்வதாக புகார் அளித்துள்ளனர்.

    கருத்துகள் இல்லை

    Post Bottom Ad