150 நாடுகளைத் தாக்கிய சைபர் குற்றவாளிகளால் கணினிகள் முடக்கம்.
150 நாடுகளில் 2 லட்சம் நிறுவனங்களின் கணினிகள் மீது சைபர் தாக்குதல் தொடரப்பட்டு, கணினிகள் முடக்கப்பட்டுள்ள நிலையில் கேரளாவில் பரபரப்பான நிலை உருவாகியுள்ளது. வங்கிகள், விமான நிலையங்கள், தொலைத்தொடர்பு சேவைகளில் கடும் பாதிப்புகள் ஏற்படலாம் என்று அச்சம் பரவி வருவதால், தொழில் நிறுவனங்கள் தங்கள் கணினிகளை வைரஸ்களில் இருந்து பாதுகாத்துக் கொள்ளும்படி கேரள போலீசார் எச்சரிக்கை வெளியிட்டுள்ளனர்.இணையம் மற்றும் கணினிகளைப் பயன்படுத்துவோருக்கு வழிகாட்டல்களையும் கேரள சைபர் செல் போலீசார் வெளியிட்டுள்ளனர்.
வார இறுதியில் நடைபெற்ற சைபர் தாக்குலின் மூலம் கிரிமினல்கள் கோடிக்கணக்கான டாலர் பணத்தை பிணைத்தொகையாக கேட்டு மிரட்டல் விடுத்துள்ளனர். இந்தியாவில் கேரளா, ஆந்திரா போன்ற மாநிலங்களிலும் இதன் பாதிப்பு உள்ளது. இந்நிலையில் இன்று அலுவலகங்கள் யாவும் திறக்கும்போது சைபர் தாக்குதலில் இந்தியா தப்பியதா தடுமாறி நிற்கிறதா என்பது தெரிய வரும்.
கருத்துகள் இல்லை