Header Ads

  • BREAKING



    வெள்ளை மாளிகையின் தினசரி செய்தியாளர் சந்திப்பு வழக்கத்தை ரத்து செய்ய டிரம்ப் திட்டம்.


    வெள்ளை மாளிகையின் அன்றாட செய்தியாளர் சந்திப்பு வழக்கத்தை ரத்து செய்ய அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் முடிவு செய்துள்ளார். தமக்கு பங்கம் ஏற்படாத வகையில் வெள்ளை மாளிகையின் செய்தி தொடர்பு அதிகாரிகளின் விளக்கம் இருக்க வேண்டும் என்று டிரம்ப் கூறியுள்ளார். இதனால் வரும் காலத்தில் வெள்ளை மாளிகையின் தினசரி செய்தியாளர் சந்திப்பு ரத்து செய்யப்படும் என்று கூறியுள்ள டிரம்ப், அதற்கு பதிலாக எழுத்து மூலம் விளக்கம் அளிக்க உத்தரவிடப் போவதாக தெரிவித்துள்ளார். தொலைப்பேசி டேப் தொடர்பாக எஃப்.பி.ஐ. முன்னாள் இயக்குனர் ஜேம்ஸ் கோமே, அதிபர் டிரம்புடன் முரண்பட்டதன் காரணமாகவே, பல ஆண்டுகளாக அமெரிக்காவில் வழக்கத்தில் உள்ள வெள்ளை மாளிகையின் செய்தியாளர் சந்திப்பை ரத்து செய்ய அதிபர் டிரம்ப் முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. ஆனால் இவரது முடிவுக்கு, வெள்ளை மாளிகையின் செய்தியாளர்கள் கூட்டமைப்பு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

    கருத்துகள் இல்லை

    Post Bottom Ad