Header Ads

  • BREAKING



    தேனி 15-க்கும் மேற்பட்டோருக்கு டெங்கு காய்ச்சல் அறிகுறிகள்.



    தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே 15-க்கும் மேற்பட்டோருக்கு டெங்கு காய்ச்சல் அறிகுறிகள் இருப்பதால், மாவட்ட சுகாதார துறையினர் அப்பகுதியில் முகாமிட்டு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.
    கதிர்நரசிங்கபுரம் கிராமத்தில் 15-க்கும் மேற்பட்டோருக்கு காய்ச்சல் பரவியதையடுத்து, மாவட்ட சுகாதார துறை சார்பில் அவர்களுக்கு ரத்த பரிசோதனை செய்யப்பட்டது. இதில், கௌசல்யா என்ற 15 வயது பெண்ணுக்கு டெங்கு காய்ச்சல் இருப்பது உறுதியானது. மேலும், சிலருக்கு டெங்கு காய்ச்சல் அறிகுறிகள் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, அவர்கள் அனைவரும் தேனி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
    மேலும், கதிர்நரசிங்கபுரம் கிராமத்தில் சுகாதார துறையினர் முகாமிட்டு, மக்களுக்கு நிலவேம்பு கசாயம் அளித்தல், கொசு மருந்து அடித்தல் உள்ளிட்ட பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

    கருத்துகள் இல்லை

    Post Bottom Ad