கைகள் இல்லை, காலும் ஊனம் 6 வயது சிறுவன் நீச்சலில் தங்கப்பதக்கம் வென்றான்.
போஸ்னியாவில் பிறந்த இஸ்மாயில் ஜூல்பிக்கிற்கு இப்போது வயது ஆறு. பிறந்தது முதலே கைகள் இல்லாமலும் ஒரு கால் ஊனமுற்ற நிலையிலும் பிறந்தான்.
ஆனால் துணிவும் தன்னம்பிக்கையும்தான் அவனுக்கு மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான நீச்சல் போட்டியில் தங்கப்பதக்கத்தை வென்று தந்துள்ளது. ஜெனிக்காவில் வசிக்கும் இஸ்மாயில் வாரம்தோறும் நீச்சல் வகுப்புகளுக்காக, சுமார் 70 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள போஸ்னியா தலைநகர் சர்ஜேவோவுக்கு வந்து போவது வழக்கம். கூச்ச சுபாவமும் நீரைக்கண்டால் அச்சமும் கொண்ட தங்கள் பிள்ளை தங்கப்பதக்கம் வெல்வான் என்று கனவில்கூட எண்ணாத அந்த பெற்றோர் மகனின் சாதனையைக் கண்டு ஆனந்தக் கண்ணீர் வடிக்கின்றனர்
கருத்துகள் இல்லை