Header Ads

  • BREAKING



    இந்தியை திணிக்கும் முயற்சி பலிக்காது: நாகர்கோவில் திமுக கருத்தரங்கில் துரைமுருகன் ஆவேசம்.


    இந்தியை திணிக்கத் துடிக்கும் மத்திய அரசின் முயற்சி பலிக்காது’ என்று நாகர்கோவிலில் நடந்த இந்திஎதிர்ப்பு கருத்தரங்கில் துரைமுருகன் தெரிவித்தார்.
    கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட திமுக சார்பில் இந்தி திணிப்பு மற்றும் நீட் தேர்வுக்கு எதிராக நாகர்கோவிலில் கருத்தரங்கம் நடைபெற்றது. தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சி துணைத்தலைவர் துரைமுருகன் பேசியதாவது:
    இந்தியை படித்தால் தவறு இல்லை, ஆனால் இந்தியை திணிக்க கூடாது. இந்த நாட்டை 400 ஆண்டுகாலம் தெலுங்கர்கள் ஆண்டார்கள், தெலுங்கு ஆட்சி மொழியானது. மராட்டியர்கள் ஆண்டபோது மராட்டிய மொழியும், மொகலாயர்கள் ஆண்டபோது உருதும், ஆங்கிலேயர்கள் ஆண்டபோது ஆங்கிலமும் நாட்டின் ஆட்சி மொழியாக இருந்தது. இந்தி மொழியின் தாயகம் பிஹார்.
    திணிக்க முயற்சிக்கிறது
    ஒரு இனத்தை அழிக்க வேண்டுமானால் மொழியை அழிக்க வேண்டும் என அறிஞர்கள் சொல்லி வைத்திருக்கிறார்கள். இந்திமொழியை திணிக்க மத்திய அரசு முயற்சிக்கிறது.
    சமஸ்கிருதத்துக்கும் மலையாளம், கன்னடத்துக்கும் தொடர்பு உண்டு. ஆனால், தமிழ்மொழி தனிமொழி. இந்த ஆட்சி அடிமை ஆட்சி. எனவே, மத்திய அரசு இந்தியை திணிக்க முயற்சிக்கிறது. கருணாநிதி கூறியதுபோல நாம் மொழிப்போராளியாக இருக்க வேண்டும். கிளர்ந்து எழ கருணாநிதி இல்லை என்று இந்தியை திணிக்க நினைக்கிறார்கள். வாழைக்கு கன்று தோன்றினால் அது தாய்மரத்தை அழித்து விடும். ஆனால், ஸ்டாலின் ஆலமர விழுது. மூன்று கருணாநிதிக்கு சமமாக அவர் ஈடு கொடுக்க கூடியவர். எனவே, இந்தியை திணிக்கத் துடிக்கும் மத்திய அரசின் முயற்சி பலிக்காது. இவ்வாறு அவர் பேசினார்.

    கருத்துகள் இல்லை

    Post Bottom Ad