Header Ads

  • BREAKING



    சொத்து தகராறு காரணமாக அண்ணனின் மனைவி மற்றும் மகள் கொலை.


    திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே சொத்துதகராறு காரணமாக அண்ணனின் மனைவி மற்றும் மகளை வெட்டிக்கொன்ற நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
    பழனியை அடுத்த வி.கே.மில்ஸ் பகுதியைச் சேர்ந்த மாரிமுத்து, தனது மனைவி தனலட்சுமி மற்றும் மகள் தமிழ்செல்வி ஆகியோரை பிரிந்து, தனது தம்பி தண்டபாணியுடன் வசித்து வந்தார்.

    தனலட்சுமி தன்னை பிரிந்து வாழும் கணவர் மாரிமுத்துவின் சொத்துக்களில் பங்கு கேட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்நிலையில் தனலட்சுமிக்கு சாதகமாக கடந்த வாரம் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அண்ணன் தன்னுடன் இருக்கும் நிலையில் அவரது சொத்தில் தனக்கு பங்கு கிடைக்காது என கருதிய மாரிமுத்துவின் தம்பி தண்டபாணி, தனலட்சுமியிடம் தகராறு செய்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் இன்று காலை தண்டபாணியின் வீட்டருகே தனலட்சுமி மற்றும் தமிழ்செல்வி ஆகியோர் நடந்து வந்துள்ளனர்.
    இதனைக் கண்டு ஆத்திரமடைந்த அவர், வீட்டிலிருந்த அரிவாளை எடுத்துச் சென்று இருவரையும் சரமாரியாக வெட்டினார். படுகாயமடைந்த இருவரும் சம்பவ இடத்தில் ரத்தவெள்ளத்தில் சரிந்து உயிரிழந்தனர். அருகிலிருந்தோர் தண்டபாணியை பிடிக்க முயன்றபோது அரிவாளைக் காட்டி மிரட்டிவிட்டு அவர் அங்கிருந்து தப்பியோடினார். தகவலறிந்து வந்த போலீசார், கொலை செய்யப்பட்ட இருவரது உடல்களையும் கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்காக பழனி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் கொலை குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், தப்பியோடிய தண்டபாணியை தேடி வருகின்றனர்.

    கருத்துகள் இல்லை

    Post Bottom Ad