மின்சாரப்பெட்டியில் தீ -நெருப்பை அணைக்க மின் ஊழியர்கள் வராததால் பொதுமக்கள் சாலைமறியல்.
சென்னை பழைய வண்ணாரப்பேட்டையில் மின்சாரம் வழங்கும் பெட்டி திடீரென்று தீப்பிடித்து எரிந்ததால் மின் விநியோகம் பாதிக்கப்பட்டது. இதனை அடுத்து பாதிக்கப்பட்ட மக்கள் கொழுந்து விட்டெரியும் தீயை அணைக்க உடனடியாக மின்சார வாரியத்திற்கு தகவல் அளித்தும் மின் ஊழியர்கள் வர தாமதமானது.
மின் ஊழியர்கள் வர தாமதமானதால் சாலை மறியலில் ஈடுபட்டவர்களுடன் போலீசார் பேச்சு நடத்தினர். அப்போது, பழுதடைந்த மின்சாரப் பேட்டியில் அடிக்கடி தீவிபத்து ஏற்படுவதாக அவர்கள் குற்றம் சாட்டினர்.
கருத்துகள் இல்லை