Header Ads

  • BREAKING



    ஆப்பிரிக்காவில் மீண்டும் எபோலா வைரஸ்.


    ஆப்பிரிக்க நாடான ((Congo)) காங்கோவில் ((Ebola)) எபோலா வைரஸ் தாக்குதல் காணப்படுவதாக உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது. சர்வதேச அளவில் மக்கள் நல்வாழ்வுக்கு எபோலா வைரஸ் அச்சுறுத்தலாக அமையும் என்பதால் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. கடந்த ஏப்ரல் 22 முதல் ரத்தப்போக்குடன் கூடிய காய்ச்சல் அறிகுறி இருந்த ஒன்பது பேருக்கு எபோலா வைரஸ் தாக்குதல் இருப்பது ரத்த பரிசோதனையில் உறுதிசெய்யப்பட்டுள்ளது. இவர்களில் மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். எபோலா வைரஸ் பரவாமல் தடுக்கும் வகையில் மருத்துவர்கள், செவிலியர், ரத்தப் பரிசோதனை செய்பவர்கள் உள்ளிட்ட மருத்துவக் குழுவினர் நோய் தாக்குதல் காணப்படும் பஸ்-ஊலே ((Bas-Uele)) மாகாணத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக காங்கோ நாட்டின் சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார். கடந்த 2014-2015 ஆம் ஆண்டுகளில் மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் எபோலா வைரஸ் தாக்குதல் ஏற்பட்டபோது பதினோராயிரம் பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத் தக்கது.

    கருத்துகள் இல்லை

    Post Bottom Ad