Header Ads

  • BREAKING



    முட்டை விலை கிடுகிடு உயர்வு.


    கடுமையான வெப்பம் காரணமாக கோழிகள் இறப்பு அதிகரித்து வருவதால், கடந்த 14 நாட்களில் முட்டை ஒன்றின் விலை 3 ரூபாய் 33 பைசாவில் இருந்து 4 ரூபாய் 11 காசுகளாக அதிகரித்துள்ளது. நாமக்கல் மண்டலத்தில் நாள் ஒன்றுக்கு 3 கோடியே 50 லட்சம் முட்டைகள் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், கடந்த ஒரு மாத காலமாக கடுமையான வறட்சி மற்றும் வெயிலின் தாக்கம் அதிகரிப்பு காரணமாக, கடுமையான தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால், கோழிகள் மீது தெளிப்பதற்கு தேவையான தண்ணீர் கிடைக்கவில்லை. எனவே, கோழிகள் இறப்பு அதிகரித்து வருகிறது. மேலும், மீன்பிடி தடை காலம் நடைமுறைக்கு வந்துள்ளதால், முட்டையின் தேவை அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதனால், முட்டை உற்பத்தி 30 விழுக்காடு குறைந்து 2 கோடியே 50 லட்சம் முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகிறது. இதன் காரணமாக கடந்த 2 வாரங்களில் முட்டை விலை 3 ரூபாய் 33 பைசாவில் இருந்து படிப்படியாக உயர்ந்து 4 ரூபாய் 11 காசுகளாக அதிகரித்துள்ளது. இந்த விலை உயர்வு வரும் காலங்களிலும் மேலும் உயரக்கூடும் என பண்ணையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

    கருத்துகள் இல்லை

    Post Bottom Ad