முட்டை விலை ஒரு வாரத்தில் 36 காசுகள் உயர்ந்து ரூ.3.54-க்கு விற்பனை.
வெயிலின் தாக்கம் அதிகரித்து முட்டை உற்பத்தி குறைந்துள்ளதால், அதன் விலை ஒரு வாரத்தில் 36 காசுகள் உயர்ந்துள்ளது.கடந்த ஏப்ரல் 29-ஆம் தேதி 6 காசுகள் உயர்ந்து 3 ரூபாய் 14 காசுக்கு விற்பனை செய்யப்பட்ட முட்டையின் விலை, மே ஒன்றாம் தேதி மேலும் 9 காசுகள் உயர்ந்து 3 ரூபாய் 23 காசுகளாக நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில், இன்று நாமக்கல்லில் நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில், மேலும் 21 காசுகள் உயர்த்தி 3 ரூபாய் 54 காசுகளாக நிர்ணயம் செய்யப்பட்டது.நாமக்கல் மண்டலத்தில் தினசரியாக சுமார் 4 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்பட்டு வரும் நிலையில், கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து முட்டை உற்பத்தி 20 சதவீதம் வரை குறைந்துள்ளது என கோழிப்பண்ணை உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர். இதனால், கடந்த ஒரு வாரத்தில் மட்டும் முட்டை ஒன்றின் விலை 36 காசுகள் உயர்ந்துள்ளது. இந்த விலை உயர்வானது தொடர்ந்து அதிகரிக்கும் என பண்ணையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
கருத்துகள் இல்லை