எழும்பூர் – பச்சிளம் குழந்தைகளுக்கான அறுவை சிகிச்சை அரங்கம் திறப்பு.
ஆசியாவிலேயே முதன்முறையாக சென்னை எழும்பூரில் உள்ள குழந்தைகள் நல மருத்துவமனையில் பச்சிளம் குழந்தைகளுக்கான அறுவை சிகிச்சை அரங்கம் திறக்கப்பட்டது.
ஒரு கோடியே 30 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்ட புதிய அறுவை சிகிச்சை அரங்கம், அலங்கார நுழைவுவாயில், மற்றும் வெண்டிலேட்டலருடன் கூடிய 40 படுக்கை வசதிகள் கொண்ட சிறப்பு வார்டு ஆகியவற்றை சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் திறந்து வைத்தார். பிறந்து 28 நாட்களே ஆன குழந்தைகளுக்கு இங்கு அறுவை சிகிச்சை செய்ய முடியும். குழந்தைகள் நல மருத்துவ துறையில் இது மேலும் ஒரு புதிய மைல்கல் என்று அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.
கருத்துகள் இல்லை