ஜம்மு-காஷ்மீர் மாநிலம் அனந்தநாக் மக்களவைத் தொகுதி இடைத்தேர்தல் ரத்து – தேர்தல் ஆணையம் அறிவிப்பு.
ஜம்மு-காஷ்மீர் மாநிலம் அனந்தநாக் மக்களவைத் தொகுதி இடைத்தேர்தலை, தலைமை தேர்தல் ஆணையம் ரத்து செய்துள்ளது. அனந்தநாக் மக்களவைத் தொகுதியில் கடந்த ஏப்ரல் 12ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்ட நிலையில், அங்கு கலவரம் வெடித்தது. இதையடுத்து, மே 25ஆம் தேதிக்கு தேர்தலை ஒத்திவைத்த தேர்தல் ஆணையம், அதற்கான ஏற்பாடுகளில் தீவிரம் காட்டி வந்தது. இந்த நிலையில் நேற்று நள்ளிரவு வெளியிட்ட அறிக்கையில், அனந்தநாக் தொகுதியில் தேர்தலை நடத்த போதுமான அளவில், பாதுகாப்பு வீரர்கள் இல்லாத காரணத்தால் இடைத்தேர்தலை ரத்து செய்வதாக அறிவித்துள்ளது. பாதுகாப்புப்படையினர் இல்லாமல், அமைதியான முறையில் தேர்தலை நடத்த முடியாது என்றும் தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது.
கருத்துகள் இல்லை