Header Ads

  • BREAKING



    வாக்காளர்களுக்கு பணம் கொடுத்ததாக புகார் வந்தால் வேட்பாளர் தகுதி நீக்கம்.



    வாக்காளர்களுக்கு பணம் கொடுத்ததாக குற்றப் பத்திரிகையில் இடம்பெறும் வேட்பாளர்களை, தகுதிநீக்கம் செய்யும் சட்டத்திருத்தத்தை மேற்கொள்ள, மத்திய அரசுக்கு தேர்தல் ஆணையம் பரிந்துரைக்க உள்ளது.
    சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் கடந்த மாதம் 12ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருந்த நிலையில், வாக்காளர்களுக்கு பணப் பட்டுவாடா செய்யப்பட்டதாக புகார் எழுந்ததால் தேர்தல் ரத்து செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து, தேர்தல் முறைகேட்டில் ஈடுபடும் வேட்பாளரைத் தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என தேர்தல் ஆணையத்திற்கு பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்திருந்தனர். இந்த நிலையில், மக்களவை மற்றும் சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் ஒருவர், வாக்காளர்களுக்கு பணம் கொடுத்ததாக குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டால், அவரை 5 ஆண்டுக்கு தகுதி நீக்கம் செய்யும் வகையில் மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ள வேண்டுமென மத்திய அரசுக்கு தேர்தல் ஆணையம் பரிந்துரைக்க உள்ளது. இதுதொடர்பாக, சட்ட அமைச்சகத்துக்கு விரைவில் கடிதம் அனுப்பப்படும் என தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. அரசியலமைப்பு சட்டப்பிரிவு 324ன்படி, தேர்தலை ரத்து செய்துவிட்டு, பின்னர் உகந்த சூழல் ஏற்படும்போது வாக்குப்பதிவை நடத்த மட்டுமே தேர்தல் ஆணையத்திற்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. இந்த அதிகாரம் போதுமானதாக இல்லை என்பதால், பணப்பட்டுவாடா புகார் எழும்போது, மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் கீழ் தகுதி நீக்க நடவடிக்கை எடுக்கும் அதிகாரத்தை வழங்க வேண்டுமென தேர்தல் ஆணையம் முறையிட உள்ளது.

    கருத்துகள் இல்லை

    Post Bottom Ad