Header Ads

  • BREAKING



    தேர்தல் ஆணையத்தின் கருத்து வருத்தமளிக்கிறது- கெஜ்ரிவால்.



    மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் தொடர்பான தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பு வருத்தமளிப்பதாக டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் முறைகேடுகள் நடப்பதாகவும், பழைய வாக்குச்சீட்டு முறையையே தேர்தல்களில் பயன்படுத்தவும் ஆம் ஆத்மி, திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் கோரிக்கை விடுத்ததை அடுத்து, நேற்று அனைத்துக்கட்சி நிர்வாகிகளுடன் தேர்தல் ஆணையம் ஆலோசனை நடத்தியது.
    இதையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த தலைமைத் தேர்தல் ஆணையர் நசீம் ஜைதி, மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் முறைகேடு செய்ய முடியும் என்று நிரூபித்தால், அது கவனத்தில் எடுத்துக்கொள்ளப்படும் என்றும் இதை சவாலாக தெரிவிப்பதாகவும் கூறினார். அவரது இந்த கருத்து குறித்து டுவிட்டரில் பதிவிட்டுள்ள அரவிந்த் கெஜ்ரிவால், தேர்தல் ஆணையத்தின் கருத்து வருத்தமளிப்பதாக தெரிவித்துள்ளார்.முறைகேடுகள் தொடர்பாக அளித்த வாக்குறுதியை தேர்தல் ஆணையம் மறந்துவிட்டதாகவும் அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார்.

    கருத்துகள் இல்லை

    Post Bottom Ad