Header Ads

  • BREAKING



    வாக்குப்பதிவு எந்திரத்தின் நம்பகத்தன்மை குறித்து அனைத்துக் கட்சிக் கூட்டம். .



    மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் தொடர்பாக எழுப்பப்படும் சந்தேகங்களைத் தீர்க்க இன்று டெல்லியில் அனைத்துக்கட்சிக் கூட்டத்தை தேர்தல் ஆணையம் கூட்டியுள்ளது.
    வாக்குப்பதிவு இயந்திரம் மீது நம்பிக்கையில்லை என்றும் முந்தைய வாக்குச்சீட்டு முறையை கடைபிடிக்க வேண்டும் என்றும் ஆம் ஆத்மி, திரிணாமூல் காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. இது தொடர்பாக விவாதிக்க இன்று அனைத்துக்கட்சிக் கூட்டத்திற்கு தலைமைத் தேர்தல் ஆணையம் டெல்லியில் ஏற்பாடு செய்துள்ளது. இதற்கான நிகழ்ச்சி நிரல் கடந்த புதன்கிழமை வெளியிடப்பட்டது. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் நம்பகத்தன்மை குறித்து சில அரசியல் கட்சிகள் எழுப்பி வரும் சந்தேகம் குறித்து தேர்தல் ஆணயைம் விளக்கம் அளிக்க உள்ளது. இப்பிரச்சினை தொடர்பாக அனைத்துக் கட்சிகளின் ஆலோசனைகளையும் தேர்தல் ஆணையம் வரவேற்றுள்ளது.
    வாக்காளர்களுக்குப் பணம் கொடுப்பது, வாக்குப்பதிவு மையங்களை வன்முறை மூலம் சிலர் கைப்பற்ற நினைப்பது போன்ற பிரச்சினைகளுக்கு முடிவு காணவும் அரசியல் கட்சிகளுடன் தேர்தல் ஆணையம் ஆலோசனை நடத்த உள்ளது. வாக்காளருக்கு லஞ்சம் கொடுத்த வேட்பாளரை 5 ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிடத் தடை விதிப்பது குறித்தும் விவாதிக்கப்பட உள்ளது.
    இதனிடையே, மத்திய அரசு நிதி ஒதுக்கியதைத் தொடர்ந்து 2019ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் யாருக்கு வாக்களித்தோம் என்பதை வாக்காளர் அறிந்து கொள்ள ஒப்புகைச் சீட்டு வழங்கும் முறையையும் தேர்தல் ஆணையம் பின்பற்ற திட்டமிட்டு அதற்கான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை வாங்க முடிவு செய்துள்ளது

    கருத்துகள் இல்லை

    Post Bottom Ad