Header Ads

  • BREAKING



    சீமைக் கருவேல மரங்களை அகற்றுவது தொடர்பான வழக்கு இன்று விசாரணை.



    சீமைக் கருவேல மரங்களை அகற்றக்கூடாது எனத் தொடரப்பட்ட வழக்கை சென்னை உயர்நீதிமன்றத்தில் 3 நீதிபதிகளைக் கொண்ட அமர்வு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்கிறது.
    தமிழகத்தில் சீமை கருவேலமரங்களை அகற்றுவதால் ஏற்படக்கூடிய பாதிப்பை ஆய்வு செய்ய ஒரு நிபுணர்கள் குழுவை அமைத்து அறிக்கை தாக்கல் செய்ய அரசுக்கு உத்தரவிடக் கோரி, சென்னையை சேர்ந்த வழக்கறிஞர் மேகநாதன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
    சீமை கருவேல மரம் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்துவதாக கூறினாலும், இது விஞ்ஞான பூர்வமாக நிரூபிக்கப்படவில்லை எனவும், இந்த மரம் சட்டவிரோதமானது என அறிவிக்கும் ஒரு சட்டமும் இல்லை என மனுதாரர் குறிப்பிட்டு இருந்தார். இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி அமர்வு, மனுவுக்கு பதிலளிக்கும்படி ஐ.ஐ.டி இயக்குனருக்கு உத்தரவிட்டு, இந்த வழக்கை 3 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்றி உத்தரவு பிறப்பித்தது. இந்நிலையில், தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், எம்.சுந்தர் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வருகிறது.

    கருத்துகள் இல்லை

    Post Bottom Ad