Header Ads

  • BREAKING



    சத்தியமங்கலம் பேருந்து நிலையம் அருகே 24 மணி நேர மது விற்பனை.


    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் பேருந்துநிலையம் அருகே 24 மணி நேரமும் கள்ளத்தனமாக நடைபெறும் மதுபான விற்பனையை போலீசார் கண்டு கொள்ளவில்லை என பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். சத்தியமங்கலத்தில் இயங்கிவந்த 7 மதுபானைக்கடைகளில் 5 கடைகள் தற்போது மூடப்பட்டு, 2 கடைகள் மட்டும் பேருந்து நிலையம் பின்புறம் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் இப்பகுதியில் உள்ள முட்புதர்காட்டில் கள்ளத்தனமாக மதுவிற்பனை ஜோராக நடைபெற்று வருகிறது. காலை 6 மணி முதல் மதியம் 12 மணிவரை விறுவிறுப்பாக விற்பனை நடைபெறுவதால் அங்கு சென்று மது அருந்தும் குடிமகன்கள், போதையில் பேருந்து நிலையத்தில் கண்ட இடங்களில் படுத்துக்கொள்வதும், பயணிகளிடம் தகாத முறையில் நடந்து கொள்வது என தொடர்ச்சியான புகார்கள் வருகிறது. இதனால் அதிகாலையிலேயே மது விற்பனையில் ஈடுபடும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    கருத்துகள் இல்லை

    Post Bottom Ad