ஃபேஸ்புக் இணையதளம் இந்தியா உள்ளிட்ட சில நாடுகளில் தற்காலிக செயல்இழப்பு.
ஃபேஸ்புக் இணையதளம், இந்தியா உள்ளிட்ட சில நாடுகளில் செயல் இழந்ததால் சமூக வளைத்தளப் பிரியர்கள் செய்வதறியாது திக்குமுக்காடிப்போனார்கள். இணையதள பயன்பாட்டாளர்களின் வாழ்வில் ஒரு முக்கிய அங்கமாகிவிட்ட ஃபேஸ்புக், இந்தியா உள்ளிட்ட சில ஆசிய நாடுகளிலும் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, வட அமெரிக்கா ஆகிய நாடுகளிலும் தற்காலிகமாக செயல் இழந்தது. ஃபேஸ்புக் மொபைல் சேவையிலும் இதேபோல் பாதிப்பு இருந்தது. 20 நிமிடங்கள் முதல் 4 மணி நேரம் வரை ஃபேஸ்புக் செயல்பாட்டில் இல்லை. பின்னர் வழக்கம்போல் செயல்படத் தொடங்கியது. தொழில் நுட்பக் கோளாறு என்று பொதுவாக சொல்லப்பட்டலும், ஃபேஸ்புக் இணையதளம் செயல் இழந்ததற்கான தெளிவான காரணம் சொல்லப்படவில்லை. கடந்த வாரம், இதே போல் வாட்ஸ்-ஆப் சேவை சில மணி நேரம் பாதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை