விவசாயிகளை வற்புறுத்தக் கூடாது: கூட்டுறவு வங்கிகளுக்கு உத்தரவு.
விவசாயிகளிடம் பயிர்க்கடன்களை வற்புறுத்தி வாங்கக் கூடாது என கூட்டுறவு வங்கிகளுக்கு சங்கப் பதிவாளர் ஞானசேகரன் சுற்றறிக்கை அனுப்பி உள்ளார்.
இதுகுறித்து அவர் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், தகுதியுள்ள விவசாயிகளுக்கு கூட்டுறவு வங்கிகள் மூலம் அதிக கடன்கள் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. குறுகிய கால பயிர்க்கடன்களை, மத்திய கால பயிர்க்கடன்களாக மாற்ற வேண்டும். விவசாயிகளிடம் பயிர்க் கடன்களை வற்புறுத்தி வாங்க வேண்டாம். மறு உத்தரவு வரும் வரை கடனை கேட்டு நோட்டீஸ் அனுப்ப வேண்டாம். விவசாயிகளுக்கு கடன் அளிப்பதில் அதிக கட்டுப்பாடுகள் கூடாது. தகுதியுள்ள விவசாயிகளுக்கு, விவசாயக் கடன்களை விரைந்து வழங்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை