Header Ads

  • BREAKING



    பரமக்குடியில் கோவில் திருவிழாவின் போது ஏற்பட்ட மோதலில் ஒருவர் அடித்துக் கொலை.



    ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே கோவில் திருவிழாவின் போது இருதரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில், இளைஞர் ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக, வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்த போலீசார், 20 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். எமனேஸ்வரத்தில் சித்திரை திருவிழாவின் போது நேற்று இரவு பரமக்குடி வைகையாற்றில் நடந்த தசாவராதம் நிகழ்ச்சியின்போது,விழாவில் கலந்து கொண்டிருந்த பெண்களை, அப்பகுதியைச் சேர்ந்த சிலர் கேலி செய்ததாக, இரு சமுதாயத்தினரிடையே திடீர் மோதல் ஏற்பட்டது. இதில் இருதரப்பினரும் மாறி மாறி கடுமையாகத் தாக்கிக் கொண்டதில், தினேஷ்குமார் என்ற மாணவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.
    இந்த கொலை சம்பவம் தொடர்பாக வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்த போலீசார், 20 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். தினேஷ்குமாரை அடித்துக் கொன்ற அனைவரையும், உடனடியாகக் கைது செய்ய வலியுறுத்தி, 300க்கும் மேற்படோர் மருத்துவமனை வளாகத்தில் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    கருத்துகள் இல்லை

    Post Bottom Ad