Header Ads

  • BREAKING



    போதைப் பொருள் குற்றச்சாட்டில் சிக்கிய தமிழக மீனவர்கள்.


    போதைப் பொருள் கடத்திய குற்றச்சாட்டில், இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட ராமநாதபுரம் மாவட்ட மீனவர்கள் மூன்று பேர், குற்றம் நிரூபிக்கப்படாததால் விடுதலை செய்யப்பட்டனர்.
    ராமநாதபுரம் மாவட்டம் தங்கச்சிமடத்தை மீனவர்கள் முத்து ராமசாமி, லெனின் மற்றும் செல்வின் ஆகியோர், போதை பொருள் கடத்தியதாக இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டு, வவுனியா சிறையில் அடைக்கப்பட்டனர்.
    இவர்கள் மீதான குற்றச்சாட்டை இலங்கை கடற்படையினரால் நிரூபிக்க முடியாததால், 3 மீனவர்களையும் விடுதலை செய்து மன்னார் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. விடுதலை செய்யப்பட்ட மீனவர்கள் மூவரும், புதன்கிழமை மாலை காரைக்கால் தனியார் துறைமுகம் வந்தடைந்தனர்.

    கருத்துகள் இல்லை

    Post Bottom Ad