Header Ads

  • BREAKING



    பிரான்சின் புதிய அதிபராக பதவி ஏற்று கொண்டார் 39 வயது இம்மானுவேல் மெக்ரான்.



    பிரான்சு நாட்டின் புதிய அதிபர் இம்மானுவேல் மெக்ரான் ((Macron)) முன்னாள் அதிபருக்கு விடை கொடுத்து அனுப்பி வைத்தார். பாரீசில் உள்ள எல்ஸீ மாளிகையில் நடைபெற்ற பிரிவு உபச்சார நிகழ்வில், ஃப்ராங்காயிஸ் ஹாலண்டே தனது பொறுப்புகளை புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள இம்மானுவேல் மெக்ரானிடம் கொடுத்துவிட்டு பதவியில் இருந்து விடைபெற்றுக்கொண்டார். புதிய அதிபராக பதவி ஏற்கும் 39 வயதான மெக்ரான், அரசியலுக்கு வந்து மூன்று ஆண்டுகளே ஆகிறது. 2014 முதல் 2016 வரை பிரான்சின் நிதி அமைச்சராக பதவி வகித்து பொதுமக்களிடையே பிரபலமடைந்தார்.
    புதிய கட்சி தொடங்கி ஓர் ஆண்டு மட்டுமே ஆன நிலையில், தேர்தலில் போட்டியிட்டு 66 சதவீத வாக்குகள் பெற்று அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். பிரான்சின் பொருளாதாரத்தை மீட்டெடுப்பது உள்ளிட்ட மிகப்பெரிய சவால்கள் மெக்ரான் முன் இருப்பதாகவும், அவற்றை சமாளிக்கும் திறமை மிக்கவர்தான் அவர் என்றும் பொதுமக்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

    கருத்துகள் இல்லை

    Post Bottom Ad