Header Ads

  • BREAKING



    மும்பை-கராச்சி விமான சேவையை நிறுத்துகிறது பாகிஸ்தான் அரசு விமான நிறுவனம்.



    மும்பையை பாகிஸ்தானின் கராச்சி நகருடன் இணைக்கும் விமானச் சேவை வரும் 11-ம் தேதியில் இருந்து நிறுத்தப்படுவதாக பாகிஸ்தான் விமானச் சேவை நிறுவனம் அறிவித்துள்ளது. இதற்கான வெளிப்படையான காரணம் ஏதும் குறிப்பிடாமல் பாகிஸ்தான் சர்வதேச ஏர்லைன்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், வரும் 11-ம் தேதிக்கு பின் கராச்சி-மும்பை இடையிலான விமான பயண முன்பதிவு டிக்கெட் விற்கப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
    சமீப நாட்களாக இந்தியா – பாகிஸ்தான் இடையிலான பூசல் அதிகரித்துவரும் நிலையில், இந்த திடீர் அறிவிப்பு வெளியாகி உள்ளது குறிப்பிட்டது.

    கருத்துகள் இல்லை

    Post Bottom Ad