Header Ads

  • BREAKING



    ஆதி யோகியின் சிலை கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடித்தது.


    கோவை மாவட்டம் வெள்ளிங்கிரி மலை அடிவாரத்தில் ஈஷா யோகா மையத்தால் அமைக்கப்பட்டுள்ள ஆதி யோகி சிலை, கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பிடித்துள்ளது.112 அடி உயரம், 81 அடி அகலத்துடன் உருவாக்கப்பட்ட ஆதி யோகியின் மார்பளவு சிலையை, பிப்ரவரி 24ஆம் தேதியன்று பிரதமர் நரேந்திர மோடி பக்தர்களுக்கு அர்ப்பணித்தார்.அமெரிக்காவின் தெற்கு டகோடா ((dakota)) மலைப் பாறைகளில் உலகின் முன்னோடி தலைவர்களின் முகத்தோற்ற உருவங்கள் செதுக்கப்பட்டிருந்தாலும், முழுமையான முக அமைப்புடன் கூடிய சிற்பமாக ஆதி யோகி சிலை இருந்து வருகிறது. இந்த சிற்பத்தை, உலகின் மிக உயரமான மார்பளவு சிலை என்று கின்னஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.

    கருத்துகள் இல்லை

    Post Bottom Ad